பெருந்தோட்டத் நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்ட ரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.
அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத காணிகள் பெருந்தோட்டத் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத் நிறுவனங்களுக்கு வழங்கப்படாத, நிறுவனங்களால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.