மதுபானங்களின் விலையில் எதுவித மாற்றமும் இல்லை

மதுபானங்களின் விலையில் எதுவித மாற்றமும் இல்லை

மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 750 மில்லி லீற்றர் மேலதிக மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1000 ரூபாவினாலும் 175 மில்லி மீற்றர் போத்தலின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் மதுபானங்களின் விலையில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என மதுவரி ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

மது வரி குறைக்கப்பட்டால் மாத்திரமே மதுபானத்தின் விலையை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version