சர்வதேச ரீதியில் குரங்கம்மை தொற்றின் அதிகரிப்புடன், இலங்கையிலும் குரங்கம்மை தொற்று தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இலங்கையிலும் இந்த தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
இலங்கையில் குரங்கம்மை பரவலுக்கான சந்தரப்பங்கள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், நாட்டினுள் நோய்ப்பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை தொற்று அதிகளவில் காணப்படும் நாடுகளுக்கிடையில் பயணம் செய்யும் நபர்களினுடாக பெரும்பாலும் பரவுவதனால், இலங்கையிலும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
குரங்கம்மை தொற்று, உடல் திரவங்கள் அல்லது காயங்களுடனான நேரடி தொடர்பு மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை போன்ற மறைமுக தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும்.