ஊழல்வாதிகள், நண்பர்களை உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரம் ஓரங்கட்டப்படும் – சஜித்

ஊழல்வாதிகள், நண்பர்களை உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரம் ஓரங்கட்டப்படும் - சஜித்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும்  வெற்றிக் கூட்டத் தொடரின் மக்கள் சந்திப்பு  இன்று(19.08) பிற்பகல் மாவனெல்லை நகரில் இடம்பெற்றது.

இதில் சஜித் பிரேமதாச ஆற்றிய உரை,

“இன்று நாட்டில் பிரித்தாள்கின்ற ஆட்சி முறை காணப்படுகின்றது. இனரீதியாக, மத ரீதியாக,  கட்சி ரீதியாக, குலம் கோத்திரமாக, வகுப்பு ரீதியாக இன்று நாடு பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை நாடு விழுந்திருக்கிற  பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க  நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.    நாட்டிலுள்ள அனைத்து கிராமங்கள் நகரங்களையும் ஒன்றாக இணைக்கின்ற  பாரிய அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள்  சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும்   காணப்படுகின்றது. நான்கு இன மக்களையும்  மையப்படுத்தி இலங்கைத்துவமாக  ஒன்றிணைய வேண்டும். அந்த இணைப்பின் ஊடாக நாட்டை கட்டி எழுப்புகின்ற வேலை திட்டத்தை முன்னெடுக்கும் சக்தி எமக்கு காணப்படுகிறது.  

இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு  விலங்கிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் உற்ற நண்பர்களின்  கொள்ளைக்காரர்களின் ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது. பொருளாதாரம்  வலுப்பெறுவதின் ஊடாக  பொதுமக்களுக்கான சலுகைகள்  இன்று கிடைக்கப்பெறவில்லை. பொதுமக்களின் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்கவே தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள்  முற்படுகின்றார்கள். இன்று சேற்றிலே கால் வைத்து வாழ்கின்ற பொதுமக்களில்  வாழ்க்கை இன்றைய பதில் ஜனாதிபதிக்கு  முக்கியத்துவமாக அமைவதில்லை. நாட்டிலே வாழ்கின்ற முக்கிய செல்வந்தர்கள் மாத்திரமே  அவருக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஊழல்வாதிகளையும்  நண்பர்களையும் உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரத்தை முழுமையாக ஓரங்கட்டி பொது மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆட்சியின் யுகத்தை நிச்சயமாக நாங்கள்  உருவாக்குவோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் காரணமாக மக்கள் வரத்தினால்  கொண்டுவரப்படுகின்ற அரசாங்கத்தினால்  எதுவும் செய்ய முடியாது என்று தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள்  குறிப்பிடுகின்றார்கள். மக்கள் வரத்தைப் பெற்றுக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் மனிதாபிமான முறையில்  ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக நாடு என்ற வகையில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். கடன் மீள செலுத்துதலை 2033 ஆம் ஆண்டு ஆரம்பிக்குமாறு சர்வதேச நாணய நிதியம்  குறிப்பிட்டு இருக்கிறது. 2028 ஆம் ஆண்டு முதல் கடனை மீள் செலுத்துவதற்கு  இந்த கையாளாகாத அரசாங்கம்  இணக்கம் தெரிவித்திருக்கிறது.

அரச நிர்வாகத்தின் ஊடாக ஏற்றுமதி துறையை நாசம் செய்திருக்கின்ற, உற்பத்தி துறையை வீழ்ச்சி அடைய செய்திருக்கின்ற  சிறு மற்றும் மத்திய தர  உற்பத்தியாளர்களை  நாசம் செய்திருக்கின்ற, தனிப்பட்ட  தொழில்  முனைவர்களை வீழ்ச்சி அடைய செய்திருக்கின்ற அரசாங்கம் 2028 ஆம் ஆண்டு ஆகும்போது மக்களின் மீது வரிகளை சுமத்த தயாராகின்றது. தற்போதைய பதில் ஜனாதிபதி அவரின் சொந்த பணத்தில்  இந்தக் கடனை செலுத்துவதில்லையே!.  இந்த நாட்டு மக்களின் அர்ப்பணிப்புடனே  கடன் செலுத்தப்படுகின்றது. கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி திட்டத்தோடு நாம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை  சந்தித்தோம். மக்களின் அபிப்பிராயம் இன்றிய  மக்களின் ஆசிர்வாதம் இல்லாத நாட்டை  வங்கரோத்தடையச் செய்த ஒரு குழுவோடு  இந்த ஒப்பந்தம் இடம்பெற்றிருக்கிறது என்று  நாம் சர்வதேச நாணய நிதியத்தின்  பிரதிநிதிகளுக்கு சுட்டி காட்டினோம். 

பொதுமக்களின் அபிப்பிராயத்தோடு  செப்டம்பர் 21 ஆம் திகதி  உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மக்கள் சார், மக்களின் நலவுகளை காக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்திற்கு செல்வோம். சிறிய மற்றும் நடுத்தர  உற்பத்தியாளர்களின் பங்களிப்பின் ஊடாக  நமது நாட்டின் தேசிய உற்பத்தியின்  50 சதவீதமானவை கிடைக்கின்றது. அவ்வாறான  இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் உற்பத்தி துறைகள் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  அது குறித்து யாரும் அவதானம் செலுத்தவில்லை.  அதற்காக நாம் குரல் எழுப்பியமையினால்  பரேட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிந்தது. ஆனாலும் வீழ்ச்சி அடைந்த தொழில் முனைவர்களின்  வியாபாரங்களுக்கான மூலதனத்தை மீள பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால்  முடியாமல் போய் உள்ளது.

அதேபோன்று 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்  அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ரணில்  விக்ரமசிங்கவிற்காகவும் எமக்காகவும்  அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 40,000 பேர்  அரசியல் பழிவாங்கல்களுக்கு  உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களின் தொழில்கள்  இல்லாது போய் இருக்கின்றன. அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி ஆதரவற்றுப்  போய் உள்ள அனைவருக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார மரண பொறிக்குள் சிக்கி இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதற்கு எமது குழு அயராது உழைக்கும். அவ்வாறான வேலை திட்டங்களை செய்ய முடியும் என்பதால் தான்  பிரபஞ்சம் மற்றும் மூச்சு போன்ற வேலை திட்டங்களை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எம்மால் செய்ய முடிந்தது.   வறுமைக்குள் சிக்கி இருக்கிற மக்களை  கட்டியெழுப்புவதற்காக ஜனசவியவிக்கும்  அப்பாற்பட்ட  வேலை திட்டங்களை  முன்னெடுப்போம். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக முதலில்  நானே அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். மாளிகை அரசியலில் இருந்து வெளியேறி நாட்டு மக்களை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியும் முக்கிய மக்கள் கூட்டணியும்  மும்முரமாக செயல்படும்.”

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version