வாக்காளர்களுக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகை நிர்ணயம் 

வாக்காளர்களுக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகை நிர்ணயம் 

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

2023ம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ், தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் தேர்தல் பிரசார செலவுகளுக்கான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் பிரசார செலவுகளுக்கு பணம் எவ்வாறு பெறப்பட்டது, எப்படி செலவிடப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version