2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது பிழை என்பதனை உணர்ந்து அந்த பிழையை திருத்தவே தற்போது சஜித் பிரேமதாசடவுன் இணைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சாந்திபில் இந்த விடயத்தை தெரிவித்தார். நல்ல தலைவர் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். கிரிக்கெட்டுக்கு மட்டும்மல்ல நாட்டுக்கும் அவ்வாறே. எமக்கு மட்டுமல், எமது பிள்ளைகளது எதிர்காலத்துக்கும் நல்ல நாட்டை நாம் வழங்க வேண்டும். சஜித் நல்ல தலைவர் முக்கிமாக அவரோடு நல்ல அணி ஒன்றுள்ளது. அதற்காகவே நான் சஜித் பிரேமதாசாவுடன் இணைத்துள்ளேன் என திலகரட்ன டில்ஷான் மேலும் கூறினார்.
இலங்கையில் கிரிக்கெட் மட்டுமன்றி 65 விளையாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சகல விளையாட்டுகளுக்குள்ளும் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அனைத்தையும் திருத்தி மேம்படுத்தி எடுக்க வேண்டுமென டில்ஷான் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்து சஜித் பிரேமதாசா செய்த வேலைகளை எந்த எதிர்க்கட்சி தலைவரும் கடந்த காலங்களில் செய்யவில்லை. குறிப்பாக
பாடசாலைகளுக்கு செய்த வேலைகள் சிறப்பானவை என சுட்டிக்காட்டினார்.
தான் எந்தவித கோரிக்கைகள், வரப்பிரசாத கோரிக்கைகள் இன்றி சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாகும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பிலும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பி சஜித்துடன் இணைந்து வேலை செய்வதாக டில்ஷான் மேலும் கூறினார். தனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற தேவை இல்லை எனவும், அவ்வாறான தேவை ஏற்படும் நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட தேர்தலில் களமிறங்குவேன் எனவும் கூறினார்.
தான் அவுஸ்திரேலியா இரட்டை பிராஜாவுரிமையை கொண்டுள்ள நிலையில், பாரளுமன்ற தேர்தலில் களமிறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் தான் அவுஸ்திரேலியா பிரஜாவுரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போதைக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு வேலை செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
தான் கிரிக்கெட் விளையாடிவிட்டு திடீரென அரசியலுக்கு வரவில்லை எனவும் மக்களுக்கான பல சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருவதாகும் டில்ஷான் இந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.