2015 ஆம் ஆண்டு முதல் தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையக மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை வழங்கியுளார். அவரே அடுத்த ஜனாதிபதியாகவரவேண்டும். அதனால்தான் மலைய மக்களுக்கு நன்மைகள் நடக்கும் என நேற்று(26.08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவ்வாறாயின் கடந்த தேர்தலில் அவரோடு இணையாமல் தற்போது வரை காத்திருந்து ஏன் அவரோடு இணைந்தீர்கள் என வி மீடியா பணிப்பாளர் விமல் அவரிடம் கேள்வியெழுப்பிய போது; “ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மாற்றம் ஒன்று தேவை என விரும்பி கடந்த தேர்தலில் களமிறங்கினார்கள். அப்போது நாமும் அதற்கு ஆதரவு வழங்கினோம். கோட்டா கோ ஹோம் என சஜித் கண்டியிலிருந்து எம்மை அழைத்தார். நாமும் இங்கே வந்தோம். அவர் வீடு போவதற்கு முன்னர் சஜித் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரிடம் எதிர்கால திட்டம் எதுவுமில்லை. அவரால் முடியாது என நிரூபித்து காட்டியுள்ளார். ஆகவே அது தெரிந்த பிறகு அதனை மக்களுக்கு காட்டுவதற்கு தைரியம் உள்ளது. அதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தேன்” என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பதிலளித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் உங்கள் எதிர்காலம் அல்லது அரசியலில் உங்கள் எதிர்காலம் என்ன? என கேள்வி எழுப்பிய போது, “தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மாற்று சக்தி. அந்த மாற்று அரசியல் சக்தி ஒரு நல்ல நிறுவனம். தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது மக்ளுக்கான நிறுவனம். அது இன்று வழி தவறி சென்றுகொண்டுள்ளது. நானும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜும் இணைந்து இந்த கூட்டணிக்குள் இருந்து பல விடயங்களை அடைவதற்காக உழைத்துள்ளோம். எமது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளோம். ஆனால் தற்போது அது வழி தவறி செல்கின்றதை பார்க்கும் போது, அதே போல திரைமறைவில் பலரோடு கூட்டு சேர்ந்து அரசியில் கொளகையில்லாமல் செயற்படுகின்றதனை பார்க்கும் போது அந்த நிறுவனம் மக்களை ஏமாற்றுகிறது என்பது எமக்கு தெரிகிறது. அதனால் சிறிய காலத்துக்கு சுயேட்சையாக செயற்படுவதாக தீர்மானித்துள்ளோம். இயற்கையும், காலமும் தமிழ் முற்போக்கு கூட்டணியை எங்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும்” என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.