இனவாதத்திற்கு இடமில்லை – அனுர

இனவாதத்திற்கு இடமில்லை - அனுர

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லையென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இனவாதத்தை தூண்டி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அனுர

“இனவாதம் என்பது ஒரு இனவாதி ஏனையோருக்கு இனவாத்தை ஊக்கமளிப்பதாகும்.எமது நாட்டில் சிங்களவர்,தமிழ்,முஸ்லிம்கள் மத்தியில் இனவாதம்
இல்லாவிட்டாலும்,எமது நாட்டு அரசியல் என்பது இனவாத அரசியலே.

அதனால்தான் கடந்த சில வருடங்களாக இனவாதமே அரசாங்கங்களின் பிரதான முழக்கமாக இருந்து வருகின்றது. அதனால் என்ன நடந்தது?
இனவாதம் மூலம் அரசாங்கங்கள் அமைவதால் இனவாத செயல்களையே செய்ய வேண்டியேற்பட்டுள்ளது.

இலங்கையில் இனவாதத்திற்கு அடிபணியாத மற்றும் நிகழ்ச்சி நிரலாக்காத அரசாங்கமே அமைய வேண்டும்.
வரலாற்றில் எந்தக் காலத்திலும் இனவாதம் வீழ்ந்ததில்லை. எனவே இந்த நாட்டில் இனவாதத்திற்கு எதிரான தேசிய ஒற்றுமையை உருவாக்க கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே” என
அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version