
எங்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் தேவையில்லை எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்து, பதவிக்கும், பணத்திற்கும், அனுமதிப்பத்திரங்களுக்கு விலை போனவர்கள், ஏனைய நபர்களும் அவர்களைப் போன்றே செயற்படுவார்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம். உதயகுமார் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் மேற்குறிப்பிடப்பட்டவாறு தெரிவித்திருந்தார்.