உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம – தர்கா நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களில் வருமான வரியை அறவிட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பிரதேச மக்களால் அளுத்கம பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.