கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் தனக்கு விடுக்கப்படவில்லையென ஐக்கிய
தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று (30.08) இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பல பத்திரிகைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை நான் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக எனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ
அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.
அதேபோன்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எனக்கு இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால் நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பணத்துக்காக விலை போயுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் நிச்சயம் அனைவருக்கும் அறிவிப்பேன்” என அவர் மேலும் கூறினார்.