கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளை கிராம இளைஞர்களுக்கு
வழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இங்கிரிய பிரதேசத்தில் நேற்று (29.08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
கொழும்பு துறைமுக நகரை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.