எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்கும் காலம் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்கும் காலம் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று(09.09) முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அட்டவணையைக் கடந்த மாதம் 26ம் திகதி தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.

அதற்கமைய ஆகஸ்ட் 26ம் திகதி முதல் செப்டெம்பர் 11ம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், செப்டெம்பர் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எல்பிட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நான்காவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, பிரதேச சபையின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதியுடன் நிறைவடைந்தது.

இருப்பினும் சிறப்பு வர்த்தமானியின் ஊடக எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி வரை எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version