ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவர் இன்று (09.09) கிழக்கிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருந்தார்.
இதன்போது, மேள – தாள வாத்தியங்கள் முழங்கி அவருக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு
தமிழ் மக்களின் ஆதரவு வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.