
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள தொகை, சம்பள நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளாந்தம் 1,700 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், இன்று (10.09) கூடிய சம்பள நிர்ணய சபையில் 1,350 ரூபாவே வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய பிரதான தொழிற்சங்கங்கள் 1350 ரூபாவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை(11.09) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக 350 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவினை வழங்குவதற்கு இம்முறையும் இணக்கம் எட்டப்படவில்லை.