தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது

தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு வவுனியாவில் இன்று (10.09) கூடியது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை இம்மாதம் 14ஆம் திகதி மீண்டும் கூட்ட வேண்டியதில்லை என்றொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் ஐவர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version