ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்காவின் வாக்கு யாருக்கு?

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்காவின் வாக்கு யாருக்கு?

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் ஜனநாயக முறைமையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்வான ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளார். ஆனாலும்
தனது வாக்குரிமையை பயன்படுத்துவதாக தெரிவித்த அவர் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லையென தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட எவருக்கும் முக்கிய பொறுப்பும் கடமையும் உள்ளது என சுட்டிக்காட்டிய அவர்
அனைத்து வேட்பாளர்களும் சிறந்த கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் ஆனால் அதை எவ்வாறு
செயற்படுத்துவார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.

அவர்களின் கொள்கைகளை திருடர்கள் குழுவுடன் செயற்படுத்த முடியாது எனறும் மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை அமுல்படுத்துதல் மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version