
பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500 ரூபா வரைக்கும் மாணவர் உதவித்தொகை தவணைக்கட்டணத்தை 6,500 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த உதவித்தொகைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.