ஜே.வி.பிக்கு வாக்களிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டதால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலமைமை அலுவலகத்தில் இன்று (10.09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஹபராதுவ தேர்தல் தொகுதி அமைப்பாளர் லயனல் இபலவத்த ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தார்.
ஜே.வி.பிக்கு வாக்களிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டதால்தான் இவ்வாறானவர்கள் இன்று எம்முடன் இணைந்து கொள்கின்றனர்.
மனச்சாட்சியின் பிரகாரம் எம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மீதமுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை எம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
தற்போது விதிக்கப்படும் உழைப்பு மீதான வருமான வரி அறவீட்டை ஒரு இலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சமாக உயர்த்துவோம்.
18% வெட் வரியை குறைப்போம். வாகன இறக்குமதிக்கு இடமளிப்போம்.
சிறந்த அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியோடே இருக்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் விதித்த வரிவருவாயை விட அதிக வரி அறவிடப்பட்டுள்ளது” என்றார்.