AFC ஆசியக் கிண்ணம்: இலங்கைக்கு அதிரடி வெற்றி

AFC ஆசியக் கிண்ணம்: இலங்கைக்கு அதிரடி வெற்றி

2027ம் ஆண்டிற்கான AFC ஆசியக் கிண்ணத்திற்கான தகுதி காண் சுற்றில் கம்போடியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை காற்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது.

கம்போடியாவில் இன்று(10.09) நடைபெற்ற போட்டியில் 4 – 2 என்ற பெனால்டி கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றியீட்டியது.

போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றுக்கொள்ளப் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, இலங்கை அணியின் கோல் காப்பாளர் சுஜன் பெரேரா முக்கிய கோல்களைத் தடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த போட்டியில் வெற்றியீட்டியதனூடாக இலங்கை அணி ஆசியக் கிண்ணத்திற்கான அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மேலும், உலக காற்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை அணி 200வது அல்லது 201வது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version