
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (11.09) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.