
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் குழுவினர் 92 பேரணிகளை 84 ஆகக் குறைத்துள்ளதாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
”பேரணிகளைக் குறைப்பது என்பது பிரச்சாரத்தின் கவனத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிட்ட உத்தியாகும்.
வளங்களை மிகவும் திறம்பட ஒதுக்குவதற்கும், முக்கிய பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களுடன் கவனம் செலுத்தும் குழுக்களுடன் ஆழமான ஈடுபாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் குழு பொது பேரணிகளின் எண்ணிக்கையை 92 இலிருந்து 84 ஆகக் குறைத்தது” என குறிப்பிட்டுள்ளார்.