உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு வழங்கிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு

உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு வழங்கிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21.10) காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (20.10) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தவிர்க்க நாளை காலை 10 மணி வரை அவகாசம் உள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, நாளை காலைக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை வெளியிடுவேன்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version