மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் வருகைத்தரவுள்ளார்.

சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக செல்லவுள்ள அவர், இன்று (20) பிற்பகல் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சியரா லியோன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு வருகைத் தரும் அவர் நாளை (21.10) சமோவா செல்லவுள்ளார்.

இந்த ஆண்டுக்கான பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version