சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி இணையும் புதிய படம்

சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி இணையும் புதிய படம்

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைத்து
உருவாகவிருக்கும் “புறநானூறு” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 25 ஆவது திரைப்படமாகும்.

சிவகார்த்திகேயன் தற்போழுது இயக்குநர் A.R.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில்
நடித்துவருவதோடு இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைய உள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் “புறநானூறு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இதன் பரீட்சார்த்த படப்பிடிப்பு இன்று (11.23)நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதுடன் இவரோடு நடிகர் அதர்வா மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீ லீலாவும் இணைந்துள்ளமை திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பை இரசிகர்கள் இடையே மேலும் அதிகரித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version