ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு ரயில் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில்
இன்று (02.11) முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.