பிந்திய செய்தி
இந்தியா முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலி விபத்தில் உயிரிழந்துள்ளதை இந்தியா அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத் அவரது மனைவி மதுலிக்கா ராவத் மற்றும் 11 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலியில் பயணித்த அனைவருமே உயிரிழந்துள்ளனர்.
முந்திய செய்தி
அத்துடன் சம்பவ இடத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் விரைந்துள்ளார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர கூட்டம் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.
பிந்திய செய்தி
இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 வீரர்கள் குறித்த ஹெலிகொப்டரில் இன்று (08/12) காலை பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியிலிருந்து நீலகிரி நோக்கி பயணம் செய்யும் போதே குறித்த ஹெலி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதைக்கு மேல் பறந்துகொண்டிருக்கும் போது, ஹெலிகொப்டரில் தீ விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து நொருங்கியுள்ளது. இந்நிலையில் 4 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், ஐவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள் என்பதுடன், முப்படை தளபதி பிபின் ராவ் பற்றிய விபரங்கள் குறித்து இதுவரை செய்திகள் வெளிவரவில்லை.