பல்வேறு காரணங்களுக்கா வேறு கட்சிகளுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை மீள கட்சியுடன் இணையுமாறு கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு எனவும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதுவருடத்தில் கட்சி தலைமையகத்தில் பணிகளை ஆரமபித்த வேளையில் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்து கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய பயணத்தை புத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.