ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரதானி வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தலதா அத்துகோரல விலகி ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருநத்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதோடு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய அவர், அப்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலில் ஆதரவு வழங்கியிருந்தார்.