இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியா, சிட்னியில் இன்று ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 72.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. ரிஷாப் பான்ட் 40 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 26 ஓட்டங்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 22 ஓட்டங்களையும் பெற்றனர். ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. பும்ரா தலைமை தாங்குகிறார். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் போலன்ட் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலியா அணி உஸ்மன் காவஜாவின் விக்கெட்டை இழந்துள்ளது. ஆட்ட நேர முடிவில் 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.