அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் தளபாடம் செய்யும் தொழிற்ச்சாலையின் கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் விமானத்திலிருந்தவர்கள் எனவும், காயமடைந்தவர்கள் தொழிற்சாலையின் ஊழியர்கள் எனவும் CNN செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் 200 பேரளவில் வேலை செய்கின்றனர்.

காயமடைந்தவர்களில் பத்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனைய எட்டு பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டிஸ்னிலான்டிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் 2 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version