நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வாநிலை இன்று (02.02) முதல் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் அப்பிரதேசங்களில் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களைக் கோரியுள்ளது.