இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் - மூவர் கைது

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக்  கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் கரிசல்  பகுதியில் பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்குத் கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதன்போது 220 புறாக்கள், 20 ஆபிரிக்க கிளிகள் , 8 மர அணில்கள், பறவைகளுக்கான மருந்து பொருட்கள், மற்றும் பாதாம் பிஸ்தா போன்றவையும்  இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் - மூவர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், அவர்களிடம் இருந்த பறவைகள் மற்றும் மர அணில்கள் மருந்துப் பொருட்கள்  அனைத்தையும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலலையத்தில் ஒப்படைத்துள்ளதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் - மூவர் கைது

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply