
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பாடிய இலங்கை 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது. இதில் சரித் அசலங்க 127(126) ஓட்டங்களையும், டுனித் வெல்லாலகே 30(34) ஓட்டங்களையும், குஷல்
மென்டிஸ் 19(17) ஓட்டங்களையும், ஜனித் லியனகே 11(29) ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 4(5) ஓட்டங்களையும் பெற்றனர். இது சரித் அசலங்கவின் 4 ஆவது சதமாகும்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் சீன் அப்பொட் 3 விக்கெட்களையும், ஆரோன் ஹார்டி, ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இதில் அலெக்ஸ் கேரி 41(38) ஓட்டங்களையும், ஆரோன் ஹார்டி 32(36) ஓட்டங்களையும், ஷோன் அப்பொட் 20(23) ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண 4 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ, டுனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், வனிது ஹசரங்க, சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.