ICC சம்பியன்ஸ் கிண்ணம் முதல் போட்டி நாணய சுழற்சி விபரம்

ICC சம்பியன்ஸ் கிண்ணம் முதல் போட்டி நாணய சுழற்சி விபரம்

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இன்று(19.02) முதல் போட்டியாக பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. அது அவர்களின் முதலாவது கிண்ணமாகும். சம்பியன்ஸ் கிண்ணத்தில் அதிக தடவைகள் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 2 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியை மொஹமட் ரிஸ்வானும் நியூசிலாந்து அணியை மிச்சல் சன்ட்னரும் தலைமை தாங்குகின்றனர்.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி :- மொஹமட் ரிஸ்வான்(தலைவர்), அப்ரர் அஹமட், சல்மான் அகா, பாபர் அசாம், பகர் சமான், ஹரிஸ் ரவுப், குஷ்தில் ஷா, நசீம் ஷா, சவுத் ஷகீல், ஷஹீன் ஷா அப்ரிடி, தய்யப் தஹிர்

நியூசிலாந்து அணி :- மிச்சல் சன்ட்னர்(தலைவர்), மிச்சல் பிரேஸ்வல், டெவோன் கொன்வே, மட் ஹென்றி, டொம் லதாம், டேரில் மிச்சல், வில்லியம் O ரூக், கிளென் பிலிப்ஸ், நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்

Social Share

Leave a Reply