இந்தியா சிறந்து பந்துவீச்சு, போராடக்கூடிய நிலையை அடைந்தது பங்களாதேஷ்

இந்தியா சிறந்து பந்துவீச்சு, போராடக்கூடிய நிலையை அடைந்தது பங்களாதேஷ்

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றது. இதில் தௌஹித் ரிதோய் 100(118) ஓட்டங்களையும், ஜேகர் அலி 68(114) ஓட்டங்களையும், தன்சிட் ஹசன் 25(25) ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்தது. 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ஜெகர் அலி, டௌகித் ரிதோய் ஆகியோர் 154 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். இது தௌஹித் ரிதோயின் முதல் சதமாகும்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி 5 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும், அக்ஷர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். மொஹமட் ஷமி அவரின் 200 ஆவது ஒரு நாள் சர்வதேச விக்கெட்களை இன்று கைப்பற்றினார்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
டன்சிட் ஹசன்பிடி – KL ராகுல்அக்ஷர் படேல்252540
சௌமிய சர்கார்பிடி – KL ராகுல்மொஹமட் ஷமி000500
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோபிடி – விராத் கோலிஹர்ஷித் ராணா000200
மெஹிடி ஹசன் மிராஸ்பிடி – ஷுப்மன் கில்மொஹமட் ஷமி051010
தெளஹீத் ரிதோய்பிடி – மொஹமட் ஷமிஹர்ஷித் ராணா10011862
முஷ்பிகுர் ரஹீம்பிடி – KL ராகுல்அக்ஷர் படேல்000100
ஜெகர் அலிபிடி – விராத் கோலிமொஹமட் ஷமி6811440
ரிஷாத் ஹொசைன்பிடி – ஹார்டிக் பாண்டியாஹர்ஷித் ராணா181212
டன்சிம் ஹசன் ஷகிப் Bowledமொஹமட் ஷமி000400
தஸ்கின் அஹமட்பிடி – ஷ்ரேயாஸ் ஐயர்மொஹமட் ஷமி030600
முஸ்தபிசுர் ரஹ்மான்Not OutNot Out000200
       
Extras  09   
ஓவர்   49.4விக்கெட்  10மொத்த ஓட்டம்  228   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
மொஹமட் ஷமி10005355.30
ஹர்ஷித் ராணா7.4003134.02
அக்ஷர் படேல்09014324.77
ஹார்டிக் பாண்டியா090063007.00
ரவீந்திரா ஜடேஜா090037004.11
குல்தீப் யாதவ்100043004.30

அணி விபரம்

இந்தியா அணி :- ரோஹித் ஷர்மா(தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், KL ராகுல், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திரா ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, ஹர்ஷித் ராணா

பங்களாதேஷ் அணி :- நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ(தலைவர்), சௌமிய சர்கார், டன்சிட் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், தெளஹீத் ரிதோய், ஜெகர் அலி, மெஹிடி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன் ஷகிப்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version