மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் – சஜித்

மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் - சஜித்

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது பெற்ற மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (21.02) உரையாற்றும் போதே போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, ​​அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு அநுரவோடு என முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதில் அமைந்துள்ளனவா என பார்க்கும் போது இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்குறுதியளித்தபடி கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படவில்லை.

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் கொள்கை பிரகடனத்தின் பக்கம் 105 இன் படி, மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை கொண்டு வருவோம் என்று கூறப்பட்டாலும், அந்த வாக்குறுதியை கைவிட்டு, இன்று மக்கள் மீது பெரும் அசௌகரியத்தையும் அழுத்த்தையும் சுமத்தி, மக்களுக்கு நலன்புரி ஒதுக்கீடுகளை வரையறுக்கின்ற 2024 நிதி முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் அடிப்படைச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% மட்டுமே, முதன்மை இருப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% மட்டுமே என்றும், உலகில் 10 நாடுகளில் மட்டுமே இத்தகைய வரம்பு இருக்கிறது.

IMF இணக்கப்பாடும், சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இணைக்கப்பாடுகள் மிகவும் பாதகமான ஒப்பந்தங்களாகும். IMF வேலைத்திட்டத்தில் இருந்து பின்வாங்காது, மக்கள் சார், மக்களின் பக்கத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமான புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த வரம்புகள் காரணமாக, புறநிலைகள் தொடர்பான திருத்தங்களைச் செய்ய முடியாது சமூக இடைவெளி ஏற்பட்டுள்ளது. பொதுப் பண்டங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இந்தக் கட்டுப்பாடுகளினால் அதுவும் தடைப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாரபட்சமான எதிர்மறை விளைவை ஏற்படுத்தும், அரசாங்கம் இதையெல்லாம் மறந்து விட்டு செயல்படுவது வெளிப்படை. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்காப்பாட்டை திருத்துவோம் என தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தாலும், அவற்றை மறந்து பெற்ற மக்கள் ஆணையைப் முழுமையாகக் காட்டிக் கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இது மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply