முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் அனைத்து
நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறினார்.
மத்திய வங்கி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலிருந்த இடம்பெற்றவை என்பதால் இந்த விடயங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்க, முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.