
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்று 12 வருடங்களின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத்தில் சம்பியன்ஸாக மகுடம் சூடுகின்றனர். இது அவர்களின் 3 ஆவது சம்பியன்ஸ் கிண்ண வெற்றியாகும்.
நாணய சுழற்சியில் வெற்ற பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. இதில் டேரில் மிச்சல் 63(101) ஓட்டங்களையும், மிச்சல் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53(40) ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 37(29) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மொஹமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 76(83) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் அய்யர் 48(62) ஓட்டங்களையும், லோகேஷ் ராஹுல் ஆட்டமிழக்காமல் 34(33) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் 31(50) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மிச்சல் பிரேஸ்வெல் மிச்சல் சன்ட்னெர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.