ஜனநாகய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட வுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (10) திங்கள்  மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போட்டியிடவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம்.ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் அங்கத்துவக் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

அதற்கான கட்டுப் பணத்தை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.ஒட்டு மொத்தமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து சபைகளிலும் போட்டியிடும்.

மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை மீள பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்கான தேர்தல் அறிவிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது.எனவே மன்னார் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்.

ஜனநாகய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மாத்திரமே ஒரு கூட்டாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுக்கப்பட்டது.எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளோம் என்று தெரிவிக்கவில்லை.9 கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மாத்திரமே முன்னெடுத்தோம்.

எனினும் இக்கூட்டு யாழ்ப்பாணத்தில் மாத்திரமே அமைய இருக்கின்றது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்  அவர்களின் கட்சி தனித்து போட்டியிட உள்ளது.ஐங்கரநேசனின் கட்சி தனித்து போட்டியிடுகின்றதா? இல்லையா என்று தெரியவில்லை.எனினும் இந்த அணியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம்.ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version