உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று (20.03) அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைய உள்ளது.

ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்த பிறகு, நடைபயண பேரணிகள் அல்லது வாகனப் பேரணிகளை நடத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply