மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் இடையே கலந்துரையாடல்

சமூக பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த உரிமைக்காய் எங்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (26.03)புதன்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மன்னார் மாவட்ட சிரேஸ்ட திட்ட அலுவலர் ஜெபநாதன் டலிமா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில், இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் வருகையை அதிகரித்துள்ளதால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றியும், இலங்கை மீனவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை மடி தொழில் காரணமாக மற்றைய மீனவர்கள் பாதிப்படைவது பற்றியும்கலந்துரையாடப்பட்டது.

மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படுகின்ற மானிய திட்டம் உரிய முறையில் மீனவர்களுக்கு வழங்கப்படாமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்,

கடலில் மீனவர்களுக்கு பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அதற்கு எவ்வித இழப்பீடுகளும் உரிய முறையில் கிடைப்பதில்லை. மீனவர்கள் முழுமையாக பாதிக்கப்படுகின்ற காலப்பகுதியில் அவர்களுக்கு உதவித்திட்டங்கள் எதுவும் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை

எனவே அவ்வாறான காலப்பகுதியில் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு திட்டங்களை துரித ப்படுத்த வேண்டும்.

அத்துடன் வட கடலில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றதைப் போல தென் கடலிலும் அவர்கள் வருகையைத் தடை செய்ய வேண்டும்.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகைக்கு எதிராக வடக்கில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அவர்களின் அத்து மீறிய வருகை அதிகரித்த வண்ணமேயுள்ளது எனக் கவலை வெளியிட்டனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version