கைதான 27 போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட இருவர் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28.03) உத்தரவிட்டது.

அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயன்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று (27.03) போராட்டத்தை முன்னெடுத்தது.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version