புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கிலும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 50 வீத விலைக்கழிவில் அதாவது 2500 ரூபாவிற்கு வழங்கப்படும்.
சதோச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக இதனைப் பெற்றக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 812,753 குடும்பங்களுக்கு இந்த உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் இந்த திட்டம் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.
பயனாளர்களுக்கு உரிய முறையில் இந்த நிவாரணம் சென்றடைகின்றதா என்பதை ஆராய்வதற்கும் பொறிமுறையொன்று அமைக்கப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியுடன் சதோசவில் என்ற தொனிப்பொருளில் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.