வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்

நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01.04) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழமைப்போன்று நுவரெலியாவில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் பொது அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையுடனும் கோலாகலமாக
வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வசந்த கால கொண்டாட்டங்களுக்கு சமாந்தரமாக மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சுற்றுலாபயணிகளின் நலன்கருதி அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா மாநகரசபையும் , பயணிகளை பாதுகாப்பதற்கான விசேட சேவையை நுவரெலியா பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version