வாகன விபத்துக்களில் 700 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடத்தில் குறித்த காலப்பகுதிக்குள், 713 வாகன விபத்துக்களில் 744 பேர் உயிரிழந்தனர்.

பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

103 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

குறித்த காலப்பகுதிக்குள் 934 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version