கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் குழந்தை காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்னர்.
தெஹியத்த கண்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயது கணவனும் 28 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.