“பட்டக் கடைகளை” இல்லாதொழிக்குமாறு கோரி போராட்டம்

சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த “பட்டக் கடைகள்” தகுதியற்ற பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற நிறுவனங்கள் அரச பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்குட்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் துறையில் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவதே இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் அண்மையில் பட்டம் பெற்றவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version