இன்று பங்குசந்தையின் பரிமாற்றத்தில் வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து பங்குகளதும் மொத்த விலைச்சுட்டெண் 13,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இன்று பரிமாற்றங்கள் நிறைவடையும் போது 13,076.91புள்ளிகளாக காணப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 12,000 புள்ளிகளை எட்டி தொட்ட விலைச்சுட்டெண் கடந்த வருடம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் 8,000 புள்ளிகளை தொட்டிருந்தது. இந்த முன்னேற்றம் சடுதியான அதிகரிப்பாக காணப்படுகிறது.
நாடு பொருளாதர சிக்கலில் உள்ள நிலையில் இவ்வாறு பங்குசந்தை அதிகரிப்பை காட்டுவது இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது என்ற குறியீடாக அமைகிறது. 1556 கோடி ரூபா பெறுமதியான பங்கு பரிமாற்றங்கள் இன்று நடைபெற்றுள்ளன.