எல்பிட்டி – பிடிகல வீதியின் அமுகொட பிரதேசத்தில் நேற்று (17/01) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 47 வயதுடைய தாயும், 21 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
